திருச்சி தமிழ்நாடு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக கடந்த 30,31 தேதிகளில் திருச்சி அருகே சனமங்கலத்தில் காலை தொடங்கியது. திருச்சி, சென்னை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 32 கி.மீ. தொலைவில் சனமங்கலத்தில் 44 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய நகரமே மாநாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்தது. திருச்சியிலிருந்து மட்டுமல்லாமல் திருச்சி, தஞ்சை, குடந்தை, நெல்லை, மதுரை, சென்னை, கோவை, ஈரோடு, வேலூர் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஆயிரக்கணக்கில் சனமங்கலத்தில் குவிந்தனர்.
வெளியூர்களிலிருந்து வருகின்ற மாநாட்டு பிரதிநிதிகளின் வசதிக்காக திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் இரயில் நிலையத்திலிருந்தும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருச்சி வாழ்மக்களின் வசதிக்காக வரகனேரி, ஆழ்வார்தோப்பு, உறையூர் தர்கா, சுப்பிரமணியபுரம், பாலக்கரை, தென்னூர் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
குழந்தைகள் விளையாடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன. மத்திய பிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் தில்லியிலிருந்தும் இயக்கத் தலைவர்கள் மாநாட்டுக்காக வந்திருந்தனர்.
தீனை நிலைநாட்டுங்கள். இதில் பிரிந்துவிடாதீர்கள்' என்ற மையக்கருத்தை முன்வைத்து இரண்டு நாள் இம்மாநாடு நடைபெற்றது.
மாநாட்டையொட்டி மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி பிரம்மாண்டமான அளவில் அமைக்கப்பட்டது இதனை முதுபெரும் இஸ்லாமிய இயக்கத் தலைவர் மௌலானா அப்துல் அஸீஸ் திறந்து வைத்தார்.
மௌலவி. இஸ்மாயில் இம்மதாதி அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரையாற்றினார். மாநாட்டின் முதன்மை அமைப்பாளர் கரீமுல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக மாநிலத் தலைவர் ஷப்பீர் அஹமத் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
'நாம் கனவு காணும் இந்தியா' என்கிற தலைப்பில் கருத்தரங்கமும், 'முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களும், தீர்வுகளும்' என்கிற தலைப்பில் சமுதாய அமர்வும், பெண்களுக்கென சிறப்புச் சொற்பொழிவுகளும் நடைபெற்றன.
மாநாட்டு மலர் வெளிடப்பட்டது.
256 பக்கங்களைக் கொண்ட இந்த மலர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் வரலாறு, தலைவர்களின் நேர்காணல்கள், சிறப்பு கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றைக் கொண்ட ஆவணப் பேழையாக மிளிர்கிறது. மலரின் விலை ரூ.50. இந்த மலரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் வெளியிட, திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் பேராசிரியர் அப்துஸ் ஸமது பெற்றுக் கொண்டார். இஸ்லாமிய அறிஞர்கள் பலர் கலந்துகொண்டுச் சிறப்புரையாற்றினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் கலந்துகொண்டனர்.
தினைநிலைநாட்டுங்கள் இதில் பிரிந்துவிடாதீர்கள் என்ற மையக் கருத்தில் இரண்டு நாட்கள் நாடந்த இம்மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி, பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி, ஜமாஅத்தின் மூத்த தலைவர்கள் அப்துல் அஜீஸ், இஜாஸ் அஸ்லம், அப்துர் ரகீப், தமிழ் மாநிலத் தலைவர் எ.ஷப்பீர் அஹ்மத், துணைத் தலைவர் மௌலவி ஹனீபா மன்பயீ, ஷேக் முஹம்மது காரகுன்னு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய மகளிர் அணி அமைப்பாளர் அத்தியா சித்திகியா, மாநில மகளிர் அணி அமைப்பாளர் வஹீத் ஃபாகிரா, துணை அமைப்பாளர் கதீஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
'ஜமாஅத்தே இஸ்லாமி இந்திய திருநாட்டில் 67 ஆண்டுகாலமாய் தீனை நிலைநாட்டும் லட்சியத்திற்காகப் பாடுபட்டு வருகிறது. வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமிய வாழ்வுமுறை முழுமையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மனிதகுலம் உயர்வடையும். துறைதோறும் சீர்திருத்தமும் ஒழுங்கும் நடைபெறும்' என்று மாநிலத் தலைவர் ஷப்பீர் அஹ்மத் குறிப்பிட்டார்.
பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் பேசிய டாக்டர் ஹபீப் முஹம்மது 'பன்மைச் சமூகத்தின் நன்மைகளையும் சாதகமான சூழல்களையும் குறிப்பிட்டதோடு, சிக்கல்கள் தோன்றினால் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் விளக்கினார். நாம் மட்டுமே நல்லவர்கள் மற்றவர்கள் எல்லாம் தவறான வழியில் இருக்கிறார்கள் என்று எண்ணுவதே பிரிவுக்கும் பிளவுக்கம் வழிவகுக்கும். பிற மக்களை இழிவாகப் பார்க்கக் கூடாது' என்றார்.
இஸ்லாத்தில் முன்னுரிமைகள் என்ற தலைப்பில் பிரச்சனைகளின் தீவிரம் புரியாமல் சின்னச்சின்ன விஷயங்களுக்கு நாம் கொடுக்கும் முன்னுரிமைகளைப் பெரிய பிரச்சனைகளுக்குத் தருவதில்லை. சமுதாயம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய ஆக்கபூர்வமான பணிகள் எவ்வளவோ இருக்க சாதாரண விஷயங்களில் கருத்து வேறுபாடுகளைப் பெரிதாக்கி, சமுதாயம் சிதறுண்டுக் கிடக்கின்றது. இந்நிலை மாறவேண்டும் தீனை நிலைநாட்டும் முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்றார் மௌலவி நூஹ்.
கருத்தரங்கம் :
நாம்கனவு கானும் இந்தியா| என்ற கருத்தரங்கம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய செயலாளர் இஜாஸ் அஹ்மத் அஸ்லம், பழ.கருப்பையா, இஸ்லாமிய வங்கிக்கான பொதுச் செயலாளர் அப்துர் ரகீப், எஸ்.என்.சிக்கந்தர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.பழ.கருப்பையா பேசும் போது, 'இந்தியாவில் ஏழ்மையும் வறுமையும் தலைவிரித்தாடுகின்றன. இஸ்லாம் கூறும் ஜகாத் எனனும் திட்டம் ஏழைகளின் வறுமையைப் போக்கி, அவர்களின் வாழ்வு நிலையை உயர்த்துகின்றது. தொழுகையை நிறைவேற்றிவிட்டு ஜகாத் கொடுக்காதவர்களை முஸ்லிம் என்றே இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. இஸ்லாத்தின் இந்த உன்னத அம்சம்தான் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. நம் கனவுகள் நிறைவேற வேண்டுமானால் இஸ்லாம் கூறும் இதுபோன்ற கொள்கைகளைப் பின்பற்றவேண்டும்' என்றார்.
சமுதாய அமர்வு:
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும் என்ற அமர்வுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜி.அப்துர் ரஹீம் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் முனைவர் ஜவாஹிருல்லாஹ், வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், எஸ்.டி.பி.ஐ தமிழ்நாட்டுத் தலைவர் மௌலவி தெஹ்லான் பாகவி, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தமிழகத் தலைவர் பேராசிரியர் எம்.பி.அஷ்அத் வஹீத் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கண்காட்சி:
இம்மாநாட்டில் இஸ்லாமிய வாழ்வை படம்பிடித்துக் காட்டும் மாபெரும் கண்காட்சியும் இடம் பெற்றது. இக்கண்காட்சியை அமைதி மற்றும் நீதிக்கான இயக்கத் தலைவர் அப்துல் அஜீஸ் திறந்து வைத்தார்.
இஸ்லாமிய வாழ்வு முறைகள், வழிபாடுகள், செயல்மாதிரிகள் தொடர்பான வண்ணப்படங்கள் நேர்த்தியாக அழகாக வைக்கப்பட்டிருந்தன. நபிகளாரின் பொன்மொழிகளும் விளக்கப்படங்களுடன் இடம் பெற்றிருந்தன.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்ழருந்தன. பெண்கள் பகுதியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அரங்கமும் அமைக்கப்பட்ழருந்தது.
மலர் வெளியீடு:
மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. 256 பக்கங்களைக் கொண்ட இந்த மலர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் வரலாறு, தலைவர்களின் நேர்காணல்கள், சிறப்புக் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் கொண்ட ஆவணப் பேழையாக மிளிர்கின்றது. மலரின் விலை ரூ.50. இந்த மலரை ஜமாஅத்தே இஸ்லாமியின் அகில இந்தியத் தலைவர் மௌலானா ஜலாலுத்தீன் உமரி அவர்கள் வெளியிட திருச்சி அய்மான் கல்லூரித் தாளாளர் பேராசிரியர் அப்துஸ் ஸமது பெற்றுக் கொண்டார்.
இந்த மாநாட்டையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தீர்மானங்கள்-
சமுதாய ஒற்றுமை, கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம், விலைவாசி உயர்வு, இஸ்லாமிய வங்கி, வரதட்சணை எதிர்ப்பு, முழுமையான மது விலக்கு போன்ற பல தலைப்புகளில் தீர்மானங்கள் நிலைவேற்றப்பட்டன.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் துணைத் தலைவர் மௌலவி ஹனீபா மன்பயீ நிறைவுரை ஆற்றினார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மாநாட்டின் துணை அமைப்பாளர் Nஷக் தாவூது நன்றி கூறினார்.
குல்லியத்துஸ் ஸலாம் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா குத்புதீன் அஹ்மத் பாகவி இறுதியாக உருக்கமான முறையில் பிரார்த்தனை (துஆ) செய்தார்.
மாநிலம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த மாநாட்டில் திரண்டனர். மாநாட்டின் தலைமை அமைப்பாளராக ஐ.கரீமுல்லாஹ் செயல்பட்டார்.
தீர்மானங்கள்
2010 ஜனவரி 30,31(சனி, ஞாயிறு) இருநாட்கள் திருச்சியில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் மாநில மாநட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம்-1
சமுதாய ஒற்றுமை
இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற சிக்கல்களையும் அறைகூவல்களையும் சந்திக்க சமுதாயம் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். பிளவுபட்டிருக்கும் சமுதாயத்தை ஒன்றிணைக்கும் தன்மை அல்லாஹ்வினால் அருளப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட, பாதுகாக்கப்பட்ட தீனில் மட்டுமே உண்டு. இந்த தீனை நிலைநாட்ட ஒருங்கிணைந்து பாடுபடுவதன் மூலமே சமுதாயத்தின் ஒற்றுமையை அடைய முடியும்.
இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நாம் மாற வேண்டும் எனில், நமக்குள்ளே நிகழும் விமர்சனங்கள், சண்டையிடுதல், அவதூறு கூறுதல் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஷலாயிலாஹா இல்லல்லாஷ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்| என்னும் கலிமாவை மொழிந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்களே, நமது சகோதரர்களே எனும் உணர்வுடன் செயல்படுவதே சமுதாய ஒற்றுமையை உருவாக்கும். இது குறித்து தங்களின் ஆழமான கவனத்தைச் செலுத்தும்படி தமிழக முஸ்லிம் அமைப்புகளையும் சமுதாயத் தலைவர்களையும் இம்மாநாட்டின் மூலமாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்-2
கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம்
தமிழக அரசு கொண்டுவந்துள்ள கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வரவேற்கிறது. அதே வேளையில், காலங்காலமாகப் பள்ளிவாசல் ஜமாஅத்துகளிலும், அரசு காஜிகள் மூலமாகவும் இஸ்லாமிய திருமணங்கள் பதிவு செய்யப்படும் நடைமுறை அமலில் இருந்துவருகிறது. இந்தத் திருமணப் பதிவுகளையே சட்டபூர்வமாக அங்கீகரிக்குமாறு தமிழக அரசை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்துகிறது.
தீர்மானம்-3
திருமணங்கள் இஸ்லாமிய அடிப்படையில் நடைபெற வேண்டும்
தமிழக முஸ்லிம்களின் திருமணங்களில் தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்கள், வீண்விரயம், வரதட்சணை போன்ற இஸ்லாத்திற்கு மாற்றமான நடைமுறைகள் இருந்து வருகின்றன. இதனால் திருமணமாகாத முதிர்கன்னிகளின் எண்ணிக்கை பெருகிவருகிறது. இது மட்டுமன்று, இத்தீமைகள் புற்றுநோயைப் போல சமூகத்தைச் செல்லரித்துக் கொண்டிருக்கின்றன.
எனவே சமூகத்தில் நடைபெறும் திருமணங்களை இந்தத் தீங்குகள் இல்லாத இஸ்லாமிய அடிப்படையில் செயல்படுத்தப் பாடுபடுமாறு ஆலிம் பெருமக்களையும் சமுதாயத் தலைவர்களையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்-4
தொடக்கப் பள்ளிகளின் அவசரத் தேவை
கல்வியறிவு இல்லாத சமுதாயம் முன்னேற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. முஸ்லிம் சமுதாயம் கல்வியில் பின்தங்கியுள்ளது. கல்வி வணிகமயமாகி விட்டிருக்கும் சூழலில் முஹல்லாக்கள் தோறும் தொடக்கப்பள்ளிக் கூடங்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும். எனவே முஹல்லாக்கள் தோறும் தொடக்கப்பள்ளிகளை உருவாக்குமாறு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சமுதாயத் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறது.தீர்மானம்-5
விலைவாசி உயர்வு
அரசின் தவறான பொருளியல் கொள்கைகளின் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும். எனவே போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்துகிறது.
தீர்மானம்-6
இஸ்லாமிய வங்கி
வட்டியின் அடிப்படையிலான பொருளியலும், ஊகம், சூதாட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலான வணிகமும் இன்றைய உலகளாவியப் பொருளாதார வீழ்ச்சிக்கு அடிப்படையக் காரணங்களாகும். இவற்றுக்கு மாற்றாக வட்டியில்லாத இஸ்லாமிய வங்கிமுறை திகழ்கிறது. திட்டக் கமி~னின் பொருளியல் சீர்திருத்தங்களுக்கான டாக்டர். ரகுராம் ராஜன் குழு, இந்தியாவில் வட்டியில்லா வங்கிமுறையை உருவாக்கும்படி நடுவணரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
இம்மாநாடு ரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு நடுவணரசைக் கேட்டுக் கொள்கிறது. மாநில அரசும், தமிழக எம்.பி. க்களும் இந்தியாவில் வட்டி இல்லாத இஸ்லாமிய வங்கியை உருவாக்க நடுவணரசை வலியுறுத்துமாறு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்-7
ஆபாசமும் பாலியல் வக்கிரங்களும்
பத்திரிகை, தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற வெகுமக்கள் ஊடகங்களில் பொழுதுபோக்க எனும் பெயரில் வெளிவரும் ஆபாச, அருவருக்கத்தக்க வக்கிரங்களை இம்மாநாடு கடுமையாகக் கண்டிக்கிறது. இவற்றில் பெண்களை ஆபாசத்தின் குறியீடாகவும், விற்பனை சரக்காகவும் விளம்பரப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.
பெண்களின் உரிமைகளும், கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
பெண்கள் மீது இழைக்கப்படும் வரதட்சணைக் கொடுமைகள், குடும்ப வன்முறைகள், பணியிடங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் ஆகியவற்றைத் தடுத்துநிறுத்த அரசை வலியுறுத்தும் படி பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்-8
எட்டாக் கனியாகும் மருத்துவம்
இன்றைய மருத்துவம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அரசு வருடாந்திர பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கு ஒதுக்கும் பங்கு மிகமிகக் குறைவாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட்டில் மருத்துவ, சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும்படியும் அனைவருக்கும் சிறந்த இலவச மருத்துவம் கிடைக்க ஆவன செய்யும்படியும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்-9
உலகமயமாக்கலின் கோர விளைவுகள்
உலகமயமாக்கலின் காரணமாக ஏற்படுகின்ற ஊறுகளையும் பாதிப்புகளையும் அதன் தொடர் விளைவாக மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை தனியார் மயமாக்கும் அரசின் மக்கள் விரோத நடவறக்கைகளையும் ஜமாஅத் வன்மையாக எதிர்க்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். தொழிலாளர்களின் பலவீனமானவர்களின் உரிமைகளை நசுக்குகின்ற யாதொரு சட்ட உருவாக்கலையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எதிர்க்கிறது.
தீர்மானம்-10
அமெரிக்கா ஏகாதிபத்தியம்
அமெரிக்கா அரசும் அதன் நேசநாடுகளும் சுதந்திர நாடுகளில் தலையிட்டு அடக்குமுறைகளிலும் அக்கிரமக்களிலும் ஈடுபட்டுத் தம்முடைய ஆதிக்கத்தை அங்கு நிலைநாட்ட மேற்கொண்டுள்ள முயற்சிகளையும், அந்த நாடுகளில் தம்முடைய உரிமைகளை மீட்க வீறு கொண்டு எழுந்துள்ள அப்பாவி மக்கள் மீது கொடுமைகள் இழைக்கப்படுவதையும் அந்த விடுதலை வேட்கை நிறைந்த மக்களைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்துவதையும் இந்தக் கேடு கெட்ட இழிவான செயல்கள் அனைத்தையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டிக்கிறது.
இஸ்ரேல் நிகழ்த்தி வரும் கொடுமைகளையும் அக்கிரமமான நடவடிக்கைகளையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டிக்கிறது. பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் விடுதலை இயக்கத்திற்கும் ஜமாஅத் ஆதரவளிக்கின்றது.
தீர்மானம்-11
வழிகெட்ட கூட்டங்கள்
இஸ்லாத்தின் அடிப்படைகளில் மிக முதன்மையானது ஏக இறைக் கொள்கையும், முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் இறுதித்தூதர் என்று நம்பிக்கை கொள்வதுமாகும். இதற்கு மாற்றமான கொள்கையில் உள்ளவர்களை முஸ்லிம்களாகக் கருத முடியாது.
இறுதி நபித்துவத்தை மறுக்கும் காதியானிகள், அஹமதியாக்கள், ஹதீஸை மறுப்பவர்கள் ஆகியோர் முஸ்லிம்கள் அல்லர் என இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.
தீர்மானம்-12
தேவை- முழுமையான மதுவிலக்கு
மது தீமைகளின் தாய். குடி குடியைக் கெடுக்கும் என்று விளம்பரப்படுத்தும் அரசாங்கமே குடும்பங்களைச் சீரழித்து நடுத்தெருவில் நிறுத்தும் மதுவை விற்பனை செய்வது மிகுந்த வேதனைக்குரியது. குடும்பங்கள் குலைவதற்கும் நோய்கள் பெருகுவதற்கும் காரணமான மதுவை உடனடியாகத் தடைசெய்து முழுமையக மதுவிலக்கை அமல்படுத்துமாறு தமிழக அரசை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மாநாட்டு துளிகள்
பொழுதுபோக்குகளும் பரபரப்பும் நிறைந்த இந்த காலகட்டத்தில் இரண்டு நாள் மாநாடு நடத்துவது எவ்வளவு பெரிய சிரமம் என்பது பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மட்டும் தெரியும்.அதை மிக நேர்த்தியாகவும் பிரம்மான்டமாகவும் செய்து முடித்து தனது திறமையை தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தெரியபடுத்தியிருக்கின்றது.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற பெயரில் செயல்பட்டுவரும் இந்த அமைப்பு தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக செயல்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இப்போதுதான் மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கின்றது.
மாநாடு நடைபெற்ற முதல் நாள் (30-01-2010) அன்று மாநாடு வளாகத்தில் வந்தபோது பார்வையாளர்கள் பிரமத்துவிடச் செய்தது.
சுமார் 5 கி.மீ. அளவுக்கு ட்யூப் லைட்டுகள் கட்டினர், 80 ஏக்கர் நிலத்தை சமப்படுத்தி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை பார்க்க முடிகின்றது.
200 க்கும் மேற்பட்ட கழிவறைகள், 100 க்கும் மேற்பட்ட குளியலறைகள், ஒழு செய்வதற்கான தண்ணீர் தொட்டிகள், குடிநீர் தேவைகளுக்காக லாரியில் குடிநீர் வசதிகள் என மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ப+ர்த்தி செய்ததை இம்மாநாட்டு வளாகத்தில் காண முடிந்தது.
மாநாட்டு வளாகத்தினுல் வாகணங்கள் சென்று வர தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன பெண்களுக்கு தனி வளாகம், தனி உணவறைகள், கழிப்பறைகள், குளியலறைகள், தங்குமிடம் என ஒரு பெரிய அரங்கமே அமைக்கப்பட்டிருந்தது. அனைவராலும் பாராட்டப்பட்டது.
தற்காலிக மருத்துவமனையும் தகவல் தொடர்பு மையமும் தீயனைப்பு துறை மையமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரவில் கொடுக்கப்பட்ட அதிக பவர் வாய்ந்த மெற்குரி விளக்குகள் என புதிய நகரம் உருவாகிவிட்டது போல் தோற்றமளித்தது.
ஆராவாரமின்றி அழைப்புப் பணிகளையும் இஸ்லாமிய பிரச்சாரப்பணிகளையும் செய்துவரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தென் தமிழகத்தையும் குறி வைத்து தமது பணிகளையும் விரைவு படுத்த வேண்டும்.
இதுபோன்ற மாநாடுகளை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை சென்னை, கோவை, தஞ்சை, மதுரை போன்ற நகருங்களில் நடத்துவதற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
டாக்டர் கே.வீ.எஸ்.ஹபீப் ரஹ்மான், பேராசிரியர். எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், குலாம் முஹம்மது, எஸ்.எம்.பாக்கர் போன்ற பிரபலமானவர்களை உருவாக்கியது ஜமாஅத்தே இஸ்லாமியே ஆகும். இவ்வாறு மேலும் பல தலைவர்களை சமுதாயத்திற்கு தரும் வாய்ப்பு தங்களுக்கு இருக்கின்றது என்பதை இந்த அமைப்பு உணரவேண்டும்.
இந்த மாநாடு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் ஆண்களை விட பெண்கள்தாம் அதிகமாககலந்து கொண்டன.
செய்தி:கோவை தங்கப்பா
No comments:
Post a Comment