தினந்தோறும் குர்ஆன் வகுப்புகள்!

த.மு.மு.க மண்டல அலுவலகத்தில்
தினமும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை குர் ஆன் வகுப்புகள் நடைபெறுகின்றன.
வர்த்தக மையங்கள் நிறைந்த பத்தாஹ் பகுதியில் உள்ள வியாபார பெருமக்கள் பயன்பெறுகின்றனர்
இந்த நேரத்தில் குர்ஆன் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

மேலும் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 2 மணியிலிருந்து 3: 30 வரையும் அதன் பின் அஸர் தொழுகை முடிந்ததிலிருந்து மஹ்ரிப் தொழுகை வரை குர்ஆன் வகுப்புகள் நடைபெறுகின்றன. குர்ஆன் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் கலந்து பயன்பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தினமும் மாலை 5: 30 மணியிலிருந்து இரவு 10மணிவரை நூலகம் திறக்கப்பட்டுள்ளது அங்கே டாக்டர் ஜாகிர் நாயக், முனைவர் ஜவாஹிருல்லாஹ், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, சகோ கோவை அய்யூப், கோவை ஜாகிர், மவுலவி முஜிபுர் ரஹ்மான் உமரி, மவுலவி அகார் முஹம்மது, மவுலவி முபாரக் மதனி மற்றும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் சீடி, டிவிடிக்கள் மற்றும் நூல்கள் கிடைக்கும். தாயகத்திலுள்ள தங்களது இல்லங்களுக்கும் தர்ஜூமா குர்ஆன்கள், ஹதீஸ்கள் மற்றும் மார்க்க நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு:
சகோ ஹூஸைன் கனி 0502929802, சகோ நூர் முஹம்மது 0559713261
மத்திய மண்டல த.மு.மு.க உங்கள‍ை அன்புடன் வரவேற்கிறது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

Friday, January 29, 2010

முஸ்லிம் லீக்கின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் அக்கட்சியிலிருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தார்.

சுதந்திர போராட்ட முஸ்லிம் தியாகிகளின் வரலாறு சமச்சீர் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

தினகரன் நாளிதழில் வெளிவந்த செய்தி

திருவாரூர் மாநாடு புகைப்படத் தொகுப்பு!













ம.ம.கவில் இணைந்த பா.ஜ.க மற்றும் தி.மு.கவினர்

திருவாரூரின் மாநாட்டு நிகழ்ச்சிகள் உற்சாகமாக போய்க் கொண்டிருந்தபோது, மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அபுஸாலிஹ் செய்த அறிவிப்பு பல்லாயிரக் கணக்கானோரை ஆர்ப்பரிக்க வைத்தது.

ம.தி.மு.க.விலிருந்து கடந்த ஜனவரி-6 அன்று அக்கட்சியின் மாவட்ட பிரதிநிதி செல்லச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ம.ம.க.வில் இணைந்தார்.

மாநாட்டை முன்னிட்டு திருவாரூர் மாவட்டமெங்கும் அவர் நாச்சிக்குளம் தாஜுதீனுடன் இணைந்து அனல் பறக்கும் பிறச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவரின் தலைமையில் ஏராளமானோர் பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர். ஆளுங்கட்சியான தி.மு.க. விலிருந்தும் 6 பேர் இணைந்தனர்.

ஆளும் கட்சியிலிருந்து விலகி நம்முடன் சேர்ந்ததும், நேர் எதிரான கொள்கையை கொண்ட பா.ஜ.க. மதவெறி கட்சியிலிருந்து விலகி, மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்ததும் பத்திரிக்கையாளர்களை ஆச்சரியத்தில் மூழ் கடித்தது.


Dowmload video

Monday, January 4, 2010

பூரண மதுவிலக்கு கோரி மறியல்! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு!!

மார்ச் 7 மதுக்கடை மறியல் போர் மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு



மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 3, 2010 அன்று திருப்பூரில் நடைபெற்றது.

இதில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ம.ம.கவின் தலைமை நிர்வாகிகளும். தலைமை செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேரா. ஜவாஹிருல்லாஹ் இன்றை அரசியல் நிலை குறித்து பேட்டியளித்தார்.

அப்போது ''மதுவின் கோர விளைவுகளால் தமிழ்நாடு காப்பாற்றப்படவேண்டும் என்றவர். இது குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாகவும், டாஸ்மார்க் மதுக்கடைகளை தமிழக அரசு இழுத்து மூட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து மார்ச் 7. 2010 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மதுக்கடை மறியல் போராட்டம் நடத்தப்படும்'' என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ம.ம.க தொண்டர்களை உற்சாகப் படுத்தியிருக்கிறது.

போராட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசிய­ல் புயலை கிளப்பப் போவது உறுதி.