தினந்தோறும் குர்ஆன் வகுப்புகள்!

த.மு.மு.க மண்டல அலுவலகத்தில்
தினமும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை குர் ஆன் வகுப்புகள் நடைபெறுகின்றன.
வர்த்தக மையங்கள் நிறைந்த பத்தாஹ் பகுதியில் உள்ள வியாபார பெருமக்கள் பயன்பெறுகின்றனர்
இந்த நேரத்தில் குர்ஆன் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

மேலும் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 2 மணியிலிருந்து 3: 30 வரையும் அதன் பின் அஸர் தொழுகை முடிந்ததிலிருந்து மஹ்ரிப் தொழுகை வரை குர்ஆன் வகுப்புகள் நடைபெறுகின்றன. குர்ஆன் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் கலந்து பயன்பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தினமும் மாலை 5: 30 மணியிலிருந்து இரவு 10மணிவரை நூலகம் திறக்கப்பட்டுள்ளது அங்கே டாக்டர் ஜாகிர் நாயக், முனைவர் ஜவாஹிருல்லாஹ், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, சகோ கோவை அய்யூப், கோவை ஜாகிர், மவுலவி முஜிபுர் ரஹ்மான் உமரி, மவுலவி அகார் முஹம்மது, மவுலவி முபாரக் மதனி மற்றும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் சீடி, டிவிடிக்கள் மற்றும் நூல்கள் கிடைக்கும். தாயகத்திலுள்ள தங்களது இல்லங்களுக்கும் தர்ஜூமா குர்ஆன்கள், ஹதீஸ்கள் மற்றும் மார்க்க நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு:
சகோ ஹூஸைன் கனி 0502929802, சகோ நூர் முஹம்மது 0559713261
மத்திய மண்டல த.மு.மு.க உங்கள‍ை அன்புடன் வரவேற்கிறது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

Tuesday, March 2, 2010

புரைதாவில் நடைபெற்ற இஸ்லாமிய சொற்பொழிவு

கடந்த 25-02-2010 வியாழன் இரவு மவுலவி சக்கீன் இஹ்ஸானி அவர்களின் தலைமையில் புரைதா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையத்தில் மார்க்கச் சொற்பொழிவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.


சகோதரர் அப்துல் அஜிஸ் அவர்களின் கிராத்துடன் நிகழ்ச்சி துவங்கியது சகோதரர் பக்கீர் மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மவுலவி அபுகாலித் அவர்களின் உரையைத் தொடர்ந்து ரியத்திலிருந்து வருகை தந்திருந்த மவுலவி ஜமால் முஹம்மது பாஸில் பாகவி அவர்கள் சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் உரையாற்றினார் அதனைத் தொடர்ந்து மவுலவி இஸ்மாயில் உமரி அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

புரைதா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியிலிருந்து பெரும் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

சகோதரர் குர்ஷித் அவர்களின் கேள்வி பதில்களுக்குப் பின் சகோதரர் சையது யூசுப் அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment