மதுவிலக்கு அமலாக்க கோரி
கோவையில் ம.ம.க. போராட்டம்
இன்ஸ்பெக்டர்- பெண் போலீசார் படுகாயம்
கோவை,மார்ச.7-
கோவையில் நடந்த போராட்டத்தில் டாஸ்மாக் கடையில் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் போலீசார் காயம் மடைந்தனர்.
டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடைபெறும் என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்திருந்தது.
கோவையில் சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடத்தில் டாஸ்மாக் கடைகளில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உக்கடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு த.மு.மு.க மாநில செயலாளர் கோவை உமர், தலைமை தாங்கினர் இதில் ம.ம.க மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், மாநகர செயலாளர் ரபிக், மற்றும் தமுமுக, மமக, மாவட்ட நிர்வாகிகள் அகமது கபீர், ஜபார்சாதிக், ஜாகீர், மைதீன் சேட், கவிஞர் ஹக், ஹக்கிம்,மற்றும் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர், அவர்கள் மதுக்கடையை மூடக்கோரி கோஷம் எழுப்பினார்கள். ஆர்பாட்டம் நடைபெற்ற இடத்தில் உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலிசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்து.
ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த தடையை தாண்டிச்செல்ல முயன்றனர், அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதில் உதவி போலீஸ் கமிஷனர் குமாரசாமி கீழே விழுந்தார்.
இந்த சமயத்தில் யாரோ சிலர் டாஸ்மாக் கடை மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்கடம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பெண் போலீஸ் கற்பகவள்ளி உள்பட 1பெண் போலீசார் படுகாயம் அடைந்தனர். கல்வீச்சு சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது,
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 175 பேரை போலீசார் கைது செய்தனர்,இதே போல் குனியமுத்தூரில் 87 பேரும், சுந்தராபுரத்தில் 68 பேரும், கைது செய்யப்பட்டனர்.
மறியலை தொடர்ந்து துனை கமிஷனர் நாகராஜ், தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார்கள் சம்பவ இடத்திற்க்கு உடனே வந்து மாநில செயலாளர் கோவை உமர்யிடம் சம்பவத்தை பற்றி விசாரித்தார்.
செய்தி.புகைப்படம்: கோவை தங்கப்பா